வெள்ளி, 8 மே, 2026

காரைக்குடி பயணம்

(2/9/25 to 6/9/25) காலை உணவு வழக்கம் போல வகை வகையாய். 9 15 மணியளவில் அனைவரிடமும் விடை பெற்று மீண்டும் நமது வேனில் அமர்ந்த போது, மனது கனமாய்த் தான் இருந்தது. வேன் திண்டுக்கல்லை நோக்கிப் பயணித்து வேகமெடுத்து, வழியில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு, பழனி மலைத் தொடர் அடிவாரத்தை அடைந்து, மலைப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. தூரம் 15 கிமீ ஆனாலும் குறுகலான மலைப் பாதையில் இரண்டு வண்டிகள் வந்த போதெல்லாம், ஓட்டுநர் சிரமப் பட வேண்டியிருந்தது. ஒரு பக்கம் மலைச் சரிவின் பாறைகளும், மறுபுறம் பள்ளத்தாக்கும் என. காட்டுப் பாதையில் ராஜக்காடு பையன் வழிகாட்ட வேன் சரிவில் ஏற ஆரம்பித்து, குறுகலான பாதையில், எஸ்டேட்டை அடைந்த போது எதிரே மிகப்.்பழமையான ஒரு வீட்டின் தோற்றம் விரிந்தது. எட்டே அறைகள் இருந்தாலும் பழமை மாறாத பாரம்பரியத்தை எங்கும் காணமுடிந்தது. காப்பித் தோட்டத்தின் நடுவே பிரமாண்டமாய் இருந்தது. பலவித தாவரங்கள் காய்கறி, பழத் தோட்டமும் கூட. மழை விட்டு விட்டுப் பெய்து அறைகளுக்குள்ளே இருக்கச் செய்தது. மழை நீர் வீணாகாமல் அங்கஙகே தொட்டி போன்ற அமைப்பில் நீர. சேகரிக்கப்பட்டு, அதன் நடுவே பசுமையான செடி ஒன்றும். எனது பாட.டியின் பழங்கால வீட்டை நினைவூட்டியது. முற்றம் நடுவே சுற்றி தூண்களுடன் திண்ணை போன்ற அமைப்பு, அறையின் பினபுறம் மரத்தால் ஆன கதவைத் திறந்தால் பசுமையான தோட்டம். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சுடச்சுட ஆர்கனிக் மதிய உணவு, அணைத்தும் அங்கேயே தயாரிக்கப்பட்ட பங்களாவிலிருந்து மாறுபட்டு அளவான வகையில் உணவுப் பண்டங்கள். ஹவுஸி, சீட்டுக்கட்டு என சிறிது் நேரம் விளையாடி, ஓய்வெடுத்து, இரவு உணவும் முடித்த பின்னர், மறு்நாள் காலை நீலேஷ் கைடுடன் ஒருவர் மட்டும் கார்டன் வாக் சென்று, காய்கறி, பழத்தோட்ட புகைப் படங்கள் எடுத்து வந்தனர். காலை உணவு சுடச்சுட இட்லி, தோசை, சட்னி, சாம்பார், பிரெட் என முடித்து , அனைவரும் தயாராகி , வேனில் ஏறிய போது, மணி ஒன்பதைக் கடந்து இருந்தது. போகும் வழியில் பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளம் கொள்ளை கொண்டது. மதுரை நோக்கிப் பயணம். வழியில் தேநீர் இடைவேளைக்கு நிறுத்திய போது, இடம் அழகான மலைத்தொடரின் பின்னணியில், ஐ லவ் டெம்பிள் சிட்டி என்ற வாசகத்துடன். பயணம் முடிவுற்று நானகு் பேர் மட்டும் விமான நிலையத்தில், விடை்பெற்றுச் செல்ல, நான்கு பேர் இரவு தங்கி, மறுநாள் பயணிக்க, நாங்கள் இருவரும், சில மணி நேரங்கள் நீலேஷ் தங்கியிருந்த அறையில் ஓய்வெடுத்து, மதுரை பெங்களூர் ட்ரெயினில் இரவு எட்டு் மணிக்கு், ஏறி அமர்ந்து பயணிக்க ஆரம்பித்தோம். அடுத்த பயணம் எங்கே செல்லலாம் என்ற விவாதம் தொடர்ந்தது. ( முற்றும்)

கருத்துகள் இல்லை: