வெள்ளி, 8 மே, 2026

தூறலில் நனையும் நினைவு

தூறலில் ஏன் நினைவு நனைய வேண்டும் தூக்கம் வராமல் யோசித்தேன் புரியாமலே வாரம் தோறும் வரும் தலைப்பே காரம் கொஞ்சம் இனிப்பும் கொஞ்சம் கதம்ப மாலை ஒன்று போதும் கதைகள் சேர்க்க கற்பனை வேண்டுமே மூளைக்குச் சலவை செய்கிற நேரம் வேளைக்குப் பாட்டெழுத கவிஞனா நான் கற்பனை கடையில் விற்கிற சரக்கா விற்பனை அமோகமா நடக்கும் அப்போது வாங்கத் தான் செல்கிறேன் வகையாய் வாங்கி வர வருவீரோ நீரும் பாங்காய் இரண்டு வாஙகலாம் தானே தூற்றாமல் இருந்தாலே போதும் ஐயா காற்றோடு போகாமல் காத்து விடலாம் எண்ணத் தூறல்களில் நனைந்த நினைவுகள் என்றோ தொலைந்ததை நினைவூட்டும் தூறல்கள் மனதின் ஆழத்தில் உறைந்து போனவை கனவாய் சிலநேரம் உறக்கம் துறக்கும் கற்பனை வானில் பறந்து திரியும் பற்பல வகையாய் வண்ணப் பூச்சாய் எல்லைகள் அற்றது எங்கும் உலவும் தொல்லைகள் யார்க்கும் அதனால் இல்லை சோகமும் சுகமும் கலந்த கலவை மோகமும் கூட நினைவில் வரலாம் கரை தொடும் அலை போல் கனவு தொடும் நினைவு ஆகும் மனந் தொடும் எண்ண அலைகள் தினந் தோறும் வந்து போகும் மற்றவர் பார்க்காமல் கண் கசியும் உற்றவர் பிரிந்த சோகம் தாக்கி தொலை தூரம் என்றாலும் செல்லும் விலை இல்லா பயணம் அதுவே நினைவு என்பதே பறவை போன்றே நிற்காது பறந்து செல்லும் வானில் தூறல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக என்றும் மனதின் பரப்பை நனைத்துப் போகும் நினைவுகள் அதனில் நனைந்து ஈரமாகும்

கருத்துகள் இல்லை: