வெள்ளி, 8 மே, 2026

உன்னருகே நானிருந்தால்

நிமிர்ந்து நிற்கும் இலக்கிய வட்டம் நிமிர் கவிஞர் பெரு மக்களே உன்னருகே நானிருந்தால் ஊறும் கவிதையங்கு என்னருகே தமிழிருந்தால் எண்ணற்ற சிந்தனைகள் கண் விழித்துப் பாட்டெழுதி விடியும் காலை பெண் என்றவள் பற்றிப் பாடுவதா புள்ளி வைத்துக் கோலம் போட கள்ளி அவள் கைவிரல்கள் நடனமாட வண்ணச் சித்திரம் வாசலில் அழகாய் நளினம் நடையிலா அசைவிலா அறியேன் பட்டிமன்ற வாதம் ஒன்றில் தெரியுமோ கட்டியம் கூறிட காலின் கொலுசு எட்டி அவள் வருகையிலே பூவாசம் கட்டி அணைக்க கைகள் துடிக்கும் பேசிடச் சிரித்திட மயக்கம் பிறக்கும் வசியம் செய்யவே வந்தவள் போலும் வாலிபம் என்பதே காதல் செய்வதோ வானத்தில் விண்மீன் வனிதை ஆவதோ நிலவும் நீரும் காற்றும் மலரும் உலவும் அவள் உருவாய் வரிகளில் கற்பனைத் தேரில் புரவிகள் சொற்கள் பற்பல வடிவில் நர்த்தனம் ஆடிட இளமையில் தோன்றும் இனிய வாழ்க்கை வளமையாய் மாறும் வயோதிக வயதில் உன்னோடு நானிருந்தால் உலகம் மறக்கும் உடலோடு உடல் சேர்ந்து உறவாடும் உனக்காக நானும் எனக்காக நீயும் உருகிக் காதல் ஊற்றாய் மாறும் பருகிட அன்பும் பாசமாய் விளையும் வாழ்வில் என்றும் வசந்த விழாவே வாலிபம் போனாலும் தொடர்ந்தே நிற்கும் உன்னருகே நானிருந்தால் உலகம் மறந்துபோம் உனது மூச்சுக் காற்றின் வெப்பம் எனது உடலின் குளிர் போக்கும் கண்ணோடு கண் நோக்கி காதல் சொல்லும் பண்பாடும் பரவசம் ஊட்டும் நரம்பில் மந்திர மொழியில் மயக்கம் பிறக்கும் தந்திர வலையில் தவிக்கும் மனது ஈர்ப்பின் இலக்கணம் எழுதப் படுமிங்கே ஈடேறும் நாடகம் அங்கே நாள்தோறும் இளமைக் காதலில் இத்தனை உண்டா இறங்கிப் பார்த்தாலே ஆழம் தெரியும் பிரிவின் ஏக்கம் பெரிதாய் மாறும் புரியாத வாழ்வின் சூழ்ச்சும முடிச்சு ஆணும் பெண்ணும் சேர்ந்த வாழ்க்கை ஆயிரம் கதைகள் கொண்ட புத்தகம் திருப்பு முனைகள் திகில் நிகழ்வுகள் திகட்டாத நாடகக் காட்சிகள் பலவும் வாழ்ந்தே பார்க்க வழிகள் பிறக்கும் வாலிபம் தொடங்கி வயோதிகம் வரையில்

கருத்துகள் இல்லை: