வெள்ளி, 8 மே, 2026

எங்கே போனாயோ

எங்கே போனாயோ தேடிக் களைத்தேன் எத்தனை நாளோ உன்னைப் பிரிந்து வாடிய மனம் துவண்டே போனதே தேடியே கால்கள் தேய்ந்தே போனதே பாடித் திரிந்த பழைய நாட்கள் ஓடித் திரிந்த வயல் வரப்புகள் காலை நனைத்த ஆற்று நீர் மாலைக் கதிரவன் ஒளியில் உன்முகம் மறக்க இயலா வண்ணக் கனவுகள் உறக்கம் மறந்த பலப்பல இரவுகள் வருவாய் எனவே ஏங்கிய நாட்கள் வ்ந்திடு வாயா விரைவில் பெண்ணே இன்றோ நாளையோ எண்ணித் தவிக்கும் இதயம் அறிந்து வந்து சேர்ந்திடு

கருத்துகள் இல்லை: