வெள்ளி, 8 மே, 2026

வழியெல்லாம் வசந்தம்

வழியெல்லாம் வசந்தமாமே யாருக்கோ சொல்வீரா வழியற்றுப் போன வறுமை விலகிற்றோ பழியேற்று பயிர் செய்யும் விவசாயம் கழிவுநீர் அகற்றி நாற்றம் உடம்பில் கடைவீதி தன்னில் கத்தும் குரலோசை படைகொண்டு சென்று உயிர்நீக்கும் வீரன் உருகும் தார்ச் சாலை உழைப்பாளி பருகும் நீருக்கு பலகாதம் நடப்போர் உண்டு கொழுத்த வக்கிர முதலாளி தொண்டு் செய்பவன் உழைப்பால் உயர்ந்தவன் பொய்கள் பேசியே உயர்ந்த தலைவன் காய்கள் நகர்த்தும் சூழ்ச்சி அரசியல் ஆணவக் கொலைகள் சாதிப் பேய்கள் ஆண்டவன் பெயரில் அக்கிரமம் செய்பவன் ஆட்சிக் கட்டிலுக்கு அனைத்தும் செய்பவன் காட்சிகள் மாறியதா கவிஞர் பெருமக்காள் வழியெல்லாம் வசந்தம் எதிலும் சுதந்திரம் வந்ததா உலகில் பதிலும் உண்டா ? கண்களை மூடியே காதுகள் அடைத்தே விண்ணிலே பறப்பதாய் ஒரு கூட்டம் பாவத்தின் நெருப்பில் குளிர்காயும் கூட்டம். கூவத்தின் நீரும் வாசனை என்கும் செய்வது அறியாது அமைதி காக்கும் பொய்களை நம்பி காலம் கடத்தும் எங்கே போகிறது எதிர்காலம் என்று உங்களைக் கேட்க நானிங்கு வந்தேன் விடைகள் இல்லாத வினாவே இதுதான் மடைகள் மாற்றிச் செல்வோம் வாரீர் !

கருத்துகள் இல்லை: