வெள்ளி, 8 மே, 2026

காரைக்குடி பயணம்

காரைக்குடி பயணம் ( 2/9/25 to 6/9/25) பொதுவாக பயணக் கட்டுரைகள் புதிதாகப் பயணிக்கும் இடங்களைப் பற்றியே எழுதுவது வழக்கம். இம்முறை தமிழ்நாட்டிலுள்ள காரைக்குடிக்கு punch pandavs குழுவில் ஒருவரோடு போவதாக சில மாதங்களுக்கு முன்பாக முடிவானது. மொத்தம் பனிரெண்டு பேர். பத்து பேர் மும்பையில் இருந்து. நாங்கள் இருவர், மதுரைக்கு ஒருநாள் முன்னதாக வந்து, ஓட்டலில் தங்கி, மீனாட்சி அம்மனை காலையில் தரிசித்து மதியம், அவர்களோடு சேர்ந்து கொள்வதாக முடிவானது. சவுத் இண்டியன் மீல்ஸ் வரவும், ருசித்துச் சாப்பிட்டு, ஓட்டல் பங்களா என்ற காரைக்குடியின் ஹெரிடேஜ் ஓட்டலை நோக்கிப் பயணம் மீண்டும். இரண்டு மணி நேரப் பயணத்திற்குப பின் , ஓட்டலை அடைந்து, காப்பி அருந்தி, இன்று சுற்றுலா ஏதுமில்லாததால், அறை இரண்டில் ஓய்வெடுத்த பிறகு, எட்டே கால் மணிக்கு புல்வெளிக் கூட்டம். ஆரம்பமானது, இரவு உணவின் மிக நீண்ட பட்டியல். கார்ன் மற்றும் பாலாடையுடன் ஒரு டிஷ், ஆப்பம் மீன் குழம்பு, சிக்கன் வறுவல், ரவா தோசை கொத்துமல்லி சட்னி, முன்னதாக உருளைக் கிழங்கு சூப், முடிவாக மாம்பழப் பல்ப்புடன், வெண்ணிலா ஐஸ்கிரீம் இது நான் சாப்பிட்டது. இது போக இரவு உணவின் மெனுவை நீங்களே பாருங்கள். எனது வயிறு கெடாமல் இருக்க நீங்கள் கண்ணை மூடிக் கொள்ளுங்கள். இப்படி மூன்று நாட்கள் இங்கே சாப்பிட்ட பிறகு முப்பது நாட்கள் உடல் எடை குறைக்க நடக்க வேண்டும். இப்போது புரிந்தது எதனால் இப்பயணத்தில் இவ்வளவு அதிகமான கட்டணம் என்பது. நிச்சயமாக Value for money paid.

கருத்துகள் இல்லை: