வெள்ளி, 8 மே, 2026

மாற்றம் வருமா

மாற்றம் வேண்டி யாரிடம் செல்வேன் மாற்றுப் பாதையை காண்பது எளிதா சோற்றுக் கனவில் உறங்கும் மனிதர் காற்றுப் புகாத குடிசை வாசிகள் நேற்றுப் பெய்த மழையின் ஈரம் வற்றாத நதிகள் வறண்ட மணலாய் நூற்றுக் கணக்கில் வறுமைச் சூழல் பெற்ற சுதந்திரம் சுவாசம் சேராமல் கற்றவர் இருந்தும் கல்லாய் மனது ஏற்றத் தாழ்வில் ஏழ்மை கொடியதாய் உற்றுப் பார்த்தால் உண்மை புலப்படும் வெற்றுத் தாளில் கரும்புள்ளி அதுவே சுற்றிப் பார்த்தேன் சுருங்கி உடல்கள் சுற்றம் அவரும் சூழ்நிலை வேறாய் மாற்றம் வருமா கேள்வி மீண்டும்

கருத்துகள் இல்லை: