வெள்ளி, 8 மே, 2026

பிலிப்பைன்ஸ்

04/03/2025 தொடர்வது முடிவதும், முடிவது தொடர்வதும் காலச் சக்கரத்தின் சுழற்சியில் தவிர்க்க இயலாதவை. மார்ச் 4 , காலை எட்டு மணிக்கே Gold Prince ஓட்டலைக் காலி செய்து, காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு சூடான காப்பி Lotteவை சுவைத்துக் குடித்த பிறகு Cebu பன்னாட்டு விமான நிலையம் நோக்கி அரை மணி நேரப் பயணம். விமான நிலையத்தில் இறங்கிய போது, சிறிய விமான நிலையமானாலும், எளிய முறையில், பெரும்பாலும் மரங்களாலான அரை வட்ட வடிவக் கூரைகளால் அழகான தோற்றமளித்தது. செக் இன் செய்து, இமிக்ரேஷன் முதலானவற்றைக் கடந்து, புறப்பாடு வாயிலில் அமர்ந்தோம். விமானத்தில் அமர்ந்து புறப்பட்ட போது, இருக்கைகள் பாதிக்கு மேல் காலியாகவே இருந்தன. சுமார் நான்கு மணி நேரப் பயணம் Air Asia வில், கோலாலம்பூர் அடைந்து, Transit பயணிகளுக்கான பாதையில், ஓய்வெடுக்க ஆரம்பித்தோம். நான்கு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த வேளையில், மதிய உணவும் சாப்பிட்டு, மீண்டும் பயணம். இப்போது சென்னை நண்பர்களும் நாங்கள் இருவரும், வெவ்வேறு பாதைகளில். இரவு பதினொரு மணிபோல், பெங்களூரு விமான நிலையத்தை அடைந்து, முன்னதாக முடிவானபடி, பிரகாஷின் மல்லேஸ்வரம் பிளாட்டில், இரவு தங்கி மறுநாள் காலை கணக்குகள் பார்த்த பிறகு , Uber டாக்ஸியில் வீடு திரும்பிய பொழுது , உடல் சோர்வு மிகுதியாகவே உணர முடிந்தது. US dollar, Philippines Peso, Indian Rupee என கரண்சிகளின் வண்ணங்களும், மதிப்பும் மாறுவதைப் போல், தட்ப வெப்ப நிலைகளும் மாறிக் கொண்டே இருந்தன. இந்தப் பயணம் மிகச் சிறப்பாக அமைந்ததற்கு, Kalm T Travelsன், நேர்த்தியான திட்டமிடல் உதவியது என Ana வுக்கு , Feedback கொடுத்த பிறகு, மொத்தப் பயணமும், 1.2 இலட்சத்தில் , திட்டமிட்டதை விட பத்தாயிரம் ரூபாய்க்குக் குறைவாக முடிந்த்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி. மற்றொரு பயணம் ஒரு வாரத்திலே கன்யா குமரிக்கு சென்னை நண்பர்களுடன் என்பது கூடுதல் தகவல். ( முற்றும்)

கருத்துகள் இல்லை: