வெள்ளி, 8 மே, 2026

ஆழ் மனதின் சூறைக்காற்று

உள்ளக் கொந்தளிப்பில் வீசும் சூறைக் காற்று கள்ளர்கள் உலகம் கயவர்கள் ஆட்டம் எங்கும் உன்மத்தர்கள் உலாவரும் வீதிகள் நாடெங்கும் பெருகியே உண்மைகள் புதைந்து பொய்களின் பேயாட்டம் எங்கும் மயக்கம் புத்தியை மங்கச் செய்த கூட்டம் தயக்கம் இன்றி தர்க்கம் செய்கிற ஆணவம் நல்லவை நசுக்கி நஞ்சினை ஊட்டும் துரோகம் பொல்லாத செயல்கள் பொறுப்பற்ற வாதங்கள் மட்டுமே எங்கே போகிறோம் என்பதே அறியாத மனிதர்கள் என்ன செய்வது என்றே அறியாத மற்றவர் மானிடம் மரித்ததா மண்டையில் மூளையே இல்லையா மாற்றம் வருமா என்ற கேள்விகள் மனதில் மதத்தின் பெயரால் கடவுளர் பெயரால் பாதகம் மக்கிப் போன சரித்திரக் குப்பைகள் நாற்றம் ஐயகோ யாரிடம் சொல்வேன் ஆழ்மனப் போராட்டம் ஐயம் பலவும் தீர்ப்பது எவரோ அறியேன் ஆழ் மனதின் சூறைக் காற்று அடங்குமா ? சூழும் கரு மேகங்கள் கலைந்து போகுமா? வினாக்கள் விடை தெரியா குழப்பம் மனதில் விடியலைத் தேடியே தினம் தினம் போராட்டம் அமைதி கிட்டுமா அலைகள் ஓயுமா அறியேன் அடங்க மறுக்குது சூறைக் காற்று இன்றும்

கருத்துகள் இல்லை: