வெள்ளி, 8 மே, 2026

புதைத்ததால் முளைத்தவர்கள்

உரமிட்டு வளர்த்து உயர்ந்த பின்னே சருகாகி சாய்ந்து போகும் மரமென்ற இயற்கை வரமென்ற ஒன்று முதிர்ந்த வயதாகிப் போனதால் மீண்டும் மண்ணிலே புதைந்து மக்கி உரமாகிச் செடிகள் வளரும் கண்ணுக்கு முன்னே புதைந்ததால் முளைத்த இவை யாவும் தெரிந்ததே மனிதருள் புதைத்ததால் முளைத்தவர்கள் யாவரென்று எண்ணிப் பார்த்தால் பலராவார் மக்கட்காய் வாழ்நாள் முழுதும் உழைத்துத் தேய்ந்து ஓடாய்ப் போனவர் வேறுபாடு அற்ற சமுதாயம் உருவாகப் பாடுபட்டே சிலையாய்ப் போனவர் வேற்றுமையில் ஒற்றுமை கண்டே தாழ்ந்தவர் உயரக் கண்டு மகிழ்ந்தவர் சாதிகள் களைந்து சரித்திரம் படைக்க உயிரீந்த உத்தமத் தலைவர் சாகாவரம் பெற்று வரவில்லை புதைந்தும் மனதில் என்றும் வாழ்பவர் மதங்கள் வேதங்கள் மாயையென்று உரக்கப் பேசியே உணர வைத்தவர் மதம்பிடித்த மடையர் பலரை அடக்கி ஒடுக்கி முடங்க வைத்தவர் அதிகார வர்க்கம் அடக்கு முறை எதிர்த்தே சிறையில் வாடியவர் அதிசயம் இவர் என்றும் தன்னலம் பேணாப் பெருந் தலைவர் புதைத்ததால் மீண்டும் மீண்டும் முளைத்த கொள்கைகள் விதைத்த வித்தகர் புகழ்மாலை பெற்று போற்றுதர்க் குரிய தலைவர் மீண்டும் வருவரோ ?

கருத்துகள் இல்லை: