வெள்ளி, 8 மே, 2026

வியர்வையின் விளைச்சல்கள்

வயலோடும் நீரும் வளர் கதிர் நெல்லும் வகையான பயிர்கள் விளைகின்ற பூமி எங்கும் கதையாகச் சொல்வது என்ன வியர்வையின் விளைச்சல்கள் உயர்ந்தோங்கி நின்று தலை நிமிரச் செய்யும் உருவான மாளிகை பலவும் நகரம் என்றும் உணர்த்தி நிற்பதுவும் இங்கே வியர்வையின் விளைச்சல்கள் கடலோடி பலகளம் கண்டு வாகை சூடிய மன்னர் படை வீரர் சரித்திரச் சான்றுகள் வீரத்தின் மாண்பை பறை சாற்றும் விளைச்சல்கள் உடல் நோக உயிர் உருக உழைத்து சுமை தூக்கும் தொழிலாளி காக்கும் குடும்பங்கள் கடமை தவறாத மானிடத்தின் மகுடமான விளைச்சல்கள் தன்னலம் மறந்த தாயின் அன்புக்கு இணையேது பாசத்தின் விளிம்பில் ஓயாது உழைக்கும் உள்ளம் தாயினது ஈடேது இதற்கு இதுவே தியாகத்தின் விளைச்சல் தாயகம் காத்திட தன்னுயிர் ஈந்து எல்லையில் உயிரையும் துறக்கும் உன்னத வீரனின் மாண்பு ஒப்பற்ற தேசப் பற்றின் அடையாள விளைச்சல் வியர்வையின் விளைச்சல் முத்துக்கள் எண்ணில் அடங்கா அயராது உழைக்கும் அத்தனை மனிதரும் மாணிக்கங்கள் விலையேது மதிப்பிட தலை வணங்கி ஏற்போம்

கருத்துகள் இல்லை: