வெள்ளி, 8 மே, 2026

யாராவது இருக்கிறீர்களா ?

அவள் போகும் போது நான் பார்க்க இயலவில்லை அவளைப் பார்த்தவர் யாராவது இருக் கிறீர்களா சொல்லுங்கள் பல்லாண்டு ஆயிற்று கண்களை விட்டு மறைய வில்லை பலகதை நான் சொல்லக் கூடும் சோகம் வேண்டாமே எழுதாத காவியம் மனதில் எழுதிய கவிதைகள் உண்டு பழுதாகித் திரும்ப பல காலம் ஆனது உண்மை யாராவது சொல்வீர்களா தோல்வி காவியம் படைக்கும் என்று போராடித் தோற்ற உள்ளம் போனது திசை மாறி அன்று வாராது மீண்டும் என்பது வார்த்தை முள்ளாய் உறுத்தும் சேராது போனது ஆனாலும் சேர்ந்தே இருப்பது என்றும் தேடிய நேரம் நீயும் தொலை தூரம் சென்றாய் வாடிய முகங்கள் வாழ்க்கை தொலைத்து பாதை மாறின ஓடிய நாட்களில் நான் நினைவுகளை அசை போட்டேன் ஓயாத கனவாய் தினமும் வந்து வந்து போனாய் தேயாத நிலவு உண்டோ மனதில் உறைந்த காயங்கள் வானத்து மின் மினியை தூதாய் அனுப்பி உள்ளேன் வாடாத முகம் கண்டு நலமென வந்து சொல்ல காலம் தான் உருண்டோடி முதுமை அணைத் தாலும் காலன் தேடி வரும் வரையில் கவிதை தொடரும் வேதனை இல்லை வேள்வி என்பேன் ஏற்றுக் கொள் சாதனை இதில் ஏதும் உண்டோ சொல்ல இயலுமோ முதல் காதல் என்பதே காவியம் போன்ற சொல் முடிவு அதற் கில்லை தொடர் கதை நீளும்

கருத்துகள் இல்லை: