வெள்ளி, 8 மே, 2026

காலைத் தென்றல்

காலைத் தென்றல் சன்னல் வழியே காதல் சொல்ல வந்ததோ அறியேன் முகம் தழுவிப் போனது மெல்ல அகம் குளிர அணைத்தது போலவே கற்பனைக் குதிரை கடிவாளம் போடாமல் கண்மண் தெரியாமல் காடுமேடு கடந்தது வெட்கம் கெட்ட மனதோ நகைத்தது கட்டில் துறக்க மனமில்லா சுகத்தில் மனதில் இளமை என்றும் தொடரும் மகிழ்ந்து வாழும் வழிகள் தேடும்

கருத்துகள் இல்லை: