செவ்வாய், 16 ஜனவரி, 2024

எச்சமாய் நினைவுகள்

 கண்கள் மனதின் ஜன்னல்கள்

கண்ணீர் அதனூடே நுழையலாம்
அசைபோட ஆயிரம் காரணங்கள்
இசையோடு இழைந்து உருகலாம்
கரிய வளையங்கள் கதைகள்
அரிய வாழ்வின் ஆதாரங்கள்
சொல்வது ஒன்றோ இரண்டோ
சொல்லாத பலவும் ஒளிந்தே
சக்கரம் போன்றதே வாழ்க்கை
சீக்கிரம் சுழன்று உருளும்
அச்சாணி முறியும் வரைதான்
எச்சமாய் நினைவுகள் மிச்சம்
இரவின் அமைதியில் முத்துக்கள்
இரவலாய் கண்களின் ஓரத்தில்
மாலையாய் மாறிடும் ஒருநாள்
மாசற்ற வாழ்வெங்கு உண்டு
மாற்றம் பலமுறை காண்பாய்
கூற்றுவன் கணக்கில் முடிவாய்
காற்றுப் போனதொரு பந்தாய்
வெற்றுப் பாதையை அடைவாய்
முற்றும் என்றொரு வார்த்தை
முடிவை அறிவித்து நிற்கும்

கருத்துகள் இல்லை: