புதன், 17 ஜனவரி, 2024

வல்லூறுகள் அழியுமோ

 வெட்கித் தலை குனிகிறேன் சகோதரி

கட்டிய சேலை அவிழ்த்த அவலம்
இந்த மண்ணில் நிகழ்ந்த கேவலம்
இந்திய நாட்டில் ரக்‌ஷா பந்தன்
எங்கே போயினர் காக்கும் ஆண்கள்
பங்கம் தங்கைக்கு என்ற போதும்
கண்கள் குருடாய் கைகள் முடமாய்
புண்ணாய் புரையோடி ஆறாத வடுவாய்
கடந்து போக மனம் வருமா
நடந்த அரக்க நாடகம் பொறுக்குமோ
நரக வாழ்வே இதுவோ ஐயகோ
வரலாறு மாறுமோ வல்லூறுகள் அழியுமோ

கருத்துகள் இல்லை: