புதன், 17 ஜனவரி, 2024

நல்ல முடிவுகள்

 வார்த்தைகள் கோர்வையாகி வளர்ந்திடும் கவிதை வரிகள்

வாதங்கள் பெருகியே உதிக்கும் நல்ல முடிவுகள்
வர்ணங்கள் கலவையாகி பிறந்திடும் அழகிய ஓவியங்கள்
வளைந்த மூங்கில் கீற்று வகையான கூடையாகும்
கலையாத மேகக் கூட்டம் மழைநீராய் மாறிவீழும்
கரையாத அன்பின் விளைவாய் நட்பொன்று பிறக்கும்
அளவான குணங்கள் என்றும் அடக்கம் சேர்க்கும்
வளமான வயல்கள் விளைச்சல் உயிரைக் காக்கும்
நலமாக வாழ்வுக்கு அளவான உணவே வழியாம்
பலமான அணைகள் ஆற்றின் நீரைத் தேக்கும்
நல்லவர் தலைவர் ஆயின் நானிலம் செழிக்கும்
வல்லவர் எல்லை காப்பின் எதிரிகள் அச்சமுறுவர்

கருத்துகள் இல்லை: