புதன், 17 ஜனவரி, 2024

எவருன் கவிதை கேட்டார்

 எழுத நினைத்து தொட்ட பொழுது

எட்டி நின்று நிறுத்து என்றது
ஏனந்த கட்டளை என்று கேட்டேன்
ஆனந்த கூத்தாடி அழகு காட்டியது
ஆடியது போதும் விடையென்ன வினவினேன்
எவருக்காய் எழுதுகிறாய் என்றது திமிராய்
இவருக்கே என்றேன் அவரைக் காட்டி
அமைதியாய் மீண்டும் எள்ளி நகையாடியது
சுமையாகிப் போனாய் நீயென்று சொன்னது
சினங் கொண்டேன் உற்று நோக்கி
இனங் கண்டே சொன்னாயா என்றேன்
மீண்டும் சிரிப்பு ஏளனப் பார்வை
கண்ணிருந்தும் குருடனா கேள்வி வந்தது
இன்னுமா புரியலை என்றது புன்னகைத்து
உன்கவிதை படிக்க நேரமில்லை யாருக்கும்
அவரவர் எண்ணங்கள் ஆழ்ந்த சிந்தனைகள்
எவருன் கவிதை கேட்டார் நிறுத்து
சொன்ன சொல்லில் உண்மை தெரிந்தது

கருத்துகள் இல்லை: