புதன், 17 ஜனவரி, 2024

காட்சிகள் மாறவில்லை

 வளமையைத் தேடி வறுமையைப் போக்க ஓடினேன்

இளமையைத் தொலைத்து இங்கும் அங்கும் தேடினேன்
இனியது தேடி வீதிகள் தோறும் சுற்றினேன்
கனியது கவர்ந்து கசப்பினைத் துறக்க நாடினேன்
கொடுமைகள் களைந்து நல்லவை சேர்க்க ஏங்கினேன்
வடுக்கள் மனதில் ஆயிரம் போக்கிட முயன்றேன்
கனவுகள் காண்பதை நினைவினில் நிறுத்த வேண்டினேன்
கருணையை விதைத்து அமைதியை நாடியே அலைந்தேன்
காலம் மட்டுமே சுழன்றது காட்சிகள் மாறவில்லை
ஞாலம் என்பதே வேற்றுமை நிறைந்த உருளையோ ?

கருத்துகள் இல்லை: