செவ்வாய், 16 ஜனவரி, 2024

பித்தப்பை அகற்றல் (Gall bladder removal)

 பித்தப்பை அகற்றல்

(Gall bladder removal)
காட்சி 2
இரவு முழுதும் சரியான தூக்கமிருக்கவில்லை. கண்ணை மூடினாலே ஆங்கிலப் படம் ஒரு குகையிலிருந்து ஆரம்பித்தது. ஸிஸ்டர் கனிமொழியிடம் சொன்னேன் படம் போன்றே ஓடுவதாக.
உடல் தகுதி அறுவைக்குத் தயார், இன்சூரன்ஸ் முதல் நிலை அப்ரூவல் முடிந்து, மதியம் அறுவைச் சிகிச்சைக்கு நேரம் குறிக்கப் பட்டு, OT எனப்படும் ஆப்பரேஷன் தியேட்டருக்கு, Stretcher ல் போனபோது உறவினர்கள் சிலர் முகங்கள் பார்த்தேன்.
ICU ல் இருக்கும் வரை நேரமும் கிழமையும் தெரியவில்லை. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு (Laproscopy), வெள்ளியன்று, 23/6/23, மீண்டும் ICU அதே அறை, அதே முகங்கள. வலியேதும் தெரியவில்லை. மெதுவாக திரவ உணவு ரவா கஞ்சியில் ஆரம்பம். இரத்த சோதனை, இதய சோதனை, சர்க்கரை சோதனைகள் தொடர்ந்தன.
காலையும் மாலையும் அனைத்துத் துறை மருத்துவ வல்லுநர்கள் வலம் வருதல். ஏனோ எல்லா பாராமீட்டர்ஸ் நார்மலாக இருந்தும், ஆஞ்சியோகிராம் பண்ண வேண்டும் எனக் கூறினர். நணபர் இராஜனின் இரண்டாம் ஒப்பினியன் கேட்ட பிறகு மகன்கள் இப்போது தேவையில்லை என முடிவெடுத்து, மருத்துவர்களிடம் தெரிவிக்கப் பட்டது.
( தொடரும்)

கருத்துகள் இல்லை: