செவ்வாய், 16 ஜனவரி, 2024

தர்மம் வெல்லுமா ?

 வங்கிக் கொள்ளையன்

வளமாய் வாழ
வறுமைக் கோட்டில்
வாடும் விவசாயி
.**************
உழைக்க ஒருவனும்
உண்ண ஒருவனும்
உடுக்க ஒருவனும்
நெய்ய ஒருவனும்
ஆள ஒருவனும்
அடிமை ஒருவனும்
கும்பிட ஒருவனும்
குட்ட ஒருவனும்
ஏய்க்க ஒருவனும்
அடங்க ஒருவனும்
திருட ஒருவனும்
ஏமாற ஒருவனும்
வெள்ளையாய் ஒருவனும்
கறுப்பாய் ஒருவனும்
கொடியவன் வாழவும்
நல்லவன் வாடவும்
என்ன சமுதாயமோ
ஏனிந்த பேதங்கள்
தர்மம் வெல்லுமா ?
நல்லவர் வாழ்வரா ?

கருத்துகள் இல்லை: