செவ்வாய், 16 ஜனவரி, 2024

வாழ்வின் கோடுகள்

 அவன் மனதிலே தோளிலே சுமந்த பாரங்கள் ஏராளம்

அவனி தந்த பாடங்கள் வாழ்வின் கோடுகள் பலவாய்
ஆண் மகனாம் அழக் கூடாதாம் சொன்னவர் யாரோ
ஆளப் பிறந்தானா அடிமை வாழ்வுக்கு வித்தான வித்தையா
சோளக் காட்டு பொம்மை போன்றே காவல் காப்பானோ
சோதனை வேதனை சுமந்த நாட்கள் எத்தனை உண்டோ
தந்தை ஆனதே தவம் என்றால் உண்மை தானோ
விந்தை வாழ்க்கை நெறி விளையாட சதுரம் வட்டமாய்
ஆதியும் அந்தமும் அறியாத தொடர் இதுதான் போலும்
மோதிய கதவுகள் சுவர்கள் எத்தனை என்பதே தெரியாது
பாரம் சுமக்க பாதைகள் நீண்ட பயணம் தொடரும்
தூரம் தெரியா ஊருக்கு விடியலி்ல் சேர்வானோ அறியோம் !

கருத்துகள் இல்லை: