செவ்வாய், 16 ஜனவரி, 2024

நாடுக நல்லதே

 மனிதனைப் பாட வேண்டுமா புகழவா போற்றவா

புனிதமாய் சிலரும் புரியாத புதிராய் பலரும்
நல்லவர் ஒருவர் உளரேல் நானிலம் செழிக்கும்
நண்பர்கள் உறவால் நன்மையே விளையும் என்றும்
வறியவர் துயர் போக்கி வளமுறச் செய்திடல்
அறிவினைப் போதிக்கும் ஆசானின் நற்செயல் அருமையாகும்
மக்களின் தேவைகள் சிறப்புறச் செய்திடும் தலைவர்கள்
கக்கன் போன்ற கரைபடியா கரங்கள் உண்டு
கல்விச் சாலைகள் பசிபோக்க உணவும் கூட
கர்ம வீரர் என்ற பெருந் தலைவர்
கட்டிய அணைகள் காலத்தால் அழியா புகழாகும்
மனிதன் ஏனோ மிருகமாய் மாறி நின்றான்
மங்கையர் உடல் சிதைத்து உன்மத்தன் ஆனான்
தீயதும் நன்மையும் பிறர் தர வாரா
தீண்டிய பாம்பின் நச்சு உடலில் பரவும்
தேடிய செல்வம் நேர்வழி என்றால் நலமே
ஓடிய கால்கள் ஓய்ந்த நாளில் வருந்திடும்
நாடுக நல்லதே மனதில் வஞ்சகம் களைக
தேடுதல் நன்றே இருளது விலக்கி ஒளியைநாடி

கருத்துகள் இல்லை: