புதன், 17 ஜனவரி, 2024

உண்மை வெல்லும்

 மூட நம்பிக்கைகள் கூறு போட்டு விலை போகின்றன

மூளைச் சலவை தினம் தினம் எங்கும் அரங்கேற்றம்
மூடிய கதவுகள் உள்ளே அறிவு அடை பட்டு
சாதிய வெறியும் வீதிகளில் சதிராடி வலம் வருது
மயக்க நிலை மனதில் புத்தி கெட்டு திரியுது
கயவர் கூட்டம் கற்பனை நாடகம் மனதில் பதியுது
எரிவது நெருப்பு என்பதே தெரியாத மனநிலை எங்கும்
புரிந்து விரைவில் பொய்களின் மாயைகள் விலகிப் போகும்
உயரப் போவது மீண்டும் வீழ்ந்தே. சிதையும்
உண்மை வெல்லும் உள்ளம் தெளியும் அமைதி நிலவும்

கருத்துகள் இல்லை: