செவ்வாய், 16 ஜனவரி, 2024

வெள்ளைத் தாளில் கரும் புள்ளிகள்

 நாடக மேடை

நடிகர்கள் நீயும்நானும்
திரை விழும் நேரம்
இருளங்கு சூழும்
****
நாக்கின் சுத்தம்
வாக்கில் இல்லை
சாக்குச் சொல்ல
சதுரங்கப் பலகை
****
வெள்ளைத் தாளில்
கரும் புள்ளிகள்
சுற்றிய கோடுகள்
வளைந்து நெளிந்து
****
அழகிய ரோஜா
பறி்த்த போது
விரலில் சிறுதுளி இரத்தம்
****
ஒன்றில் ஒன்று
சென்று சேர்ந்து
ஒன்றில் மற்றொன்று
உருவாகி இரண்டாகும்
****
ஓடிய கால்கள்
ஓய்ந்த போது
தரையில் ஊன்றிய
மூன்றாவது கால்
****
இரத்தம் சிவப்பு
வியர்வை கரிப்பு
இறுதி நிலையில்
ஆறடி நிலமே
இடையினில் ஏனோ
இத்தனை ஆட்டம்
****

கருத்துகள் இல்லை: