புதன், 17 ஜனவரி, 2024

சுதந்திரம்

 பெற்ற சுதந்திரம் பேணிக் காப்போம்

கற்ற கல்வியைக் கருத்தில் கொள்வோம்
வெற்று வார்த்தைகள் பேசுதல் செய்யோம்
பற்று நாட்டின் ஒற்றுமை என்போம்
உற்ற தோழர் அனைவரும் ஆகட்டும்
மற்ற பிரிவினை மறந்தே வாழ்வோம்
சுற்று சூழல் தூய்மை செய்வோம்
நாற்று நட்டு நெல்மணி விளைப்போம்
வேற்று நாட்டு எதிரி வெல்வோம்
சோற்றை அளிக்கும் உழவைப் போற்றுவோம்
காற்றை மாசில்லா தூயது ஆக்குவோம்
ஆற்று நீரை அனைவரும் பயனுறுவோம்
வேற்றுமை களைவோம் கூடியே கொண்டாடுவோம்

கருத்துகள் இல்லை: