செவ்வாய், 16 ஜனவரி, 2024

நாட்டின் பெருமை

 ஒரே நாடு தான் குளிரும் சுடு வெயிலும் பெரு வெள்ளமும்

ஒன்றல்ல பல மொழி பல மதங்கள் கொள்கைகள் பழக்க வழக்கங்கள்
வேற்றுமையே ஒற்றுமை மனதில் மனிதம் மட்டுமே ஓங்கி தேசப்பற்று மிகுந்து
வேற்று நாட்டினர் வியக்கும் அறிவு கலைகள் இயற்கைச் செல்வம் அனைத்தும்
என்ன இல்லை எம் நாட்டில் என்றே முன்னோர் சொன்ன உண்மை
எம்மவர் எங்கே சென்றாலும் உயர்ந்தே வாழும் வாழ்வு பெருமை கொண்டு
உலகின் மூத்த மொழி மூத்த குடி மக்கள் நாகரிக வளர்ச்சி
உழைப்பால் உயர்ந்த உத்தம மக்கள் உழவால் உயர்ந்த உணவுப் பொருட்கள்
உள்ளம் மகிழ் என் நாட்டின் பெருமை எண்ணில் அடங்காது காண்

கருத்துகள் இல்லை: