செவ்வாய், 16 ஜனவரி, 2024

திருந்தா மனிதம்

 அலைகள் மண் நிறம் பார்த்து கரை சேர்வதில்லை

மலையில் விழும் மழைத் துளிகள் நதியாகி கடல்சேரும்
ஊருணி நீரும் ஊற்று நீரும் தாகம் தீர்க்கும்
ஊரின் எல்லை காவல் தெய்வம் கிராமம் காக்கும்
நாயும் கூட நன்றி விசுவாசம் மனிதர் மேலே
மேயும் மானை பசி வந்தாலே புலியும் கொல்லும்
காட்டில் வாழும் மிருகம் இனத்தோடு ஒன்றி வாழும்
கூட்டில் வாழும் பறவை குஞ்சுகள் காத்து நிற்கும்
ஏட்டில் படித்த எதையும் மறக்கும் மனித மனமே
ஏளனம் பேசும் ஏய்த்து வாழும் ஏமாற்றப் பார்க்கும்
பேராசை கொள்ளும் பொறாமை கொள்ளும் பொய்யும் பேசும்
பேசுதல் எதிலும் வன்மம் சேர்க்கும் நல்லதை மறக்கும்
ஆறறிவு இருந்தும் ஐந்தறிவு மிருகமாய் மாறும் மனிதம்
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் திருந்தா உயிரினம் உலகில்

கருத்துகள் இல்லை: