செவ்வாய், 16 ஜனவரி, 2024

தவிக்கும் மனமிது

 வானிலே உன் முகம் கண்டே விடியலும் விழித்தது

வாசலில் வண்ணக் கோலம் உன் வரவைச் சொல்லியது
நீயென நிலவும் வெண்மை ஒளியில் வலம் வந்தது
நீல வானின் தாரகைகள் கண் சிமிட்டிச் சிரித்தது
காற்றின் சலனம் மெல்லிய நடையில் வரவைத் தெரிவித்தது
நேற்றோ நாளையோ கிழமை தோறும் உனக்காய் மாறியது
இன்றைய நாளும் எனது தனிமை போக்க விடிந்தது
சென்றது எங்கே வினாவின் விடையாய் உனது வரவானது
பித்தனாய் மாறி பிதற்றும் என்னை எப்படி மறந்தது
நித்தமும் உன்முகம் காணக் கண்கள் இமைக்க மறந்தது
சென்றது எங்காயினும் விரைந்து வந்திங்கு என்னைச் சேர்ந்திடு
கன்றது பசுவினைத் தேடுதல் போலே தவிக்கும் மனமிது

கருத்துகள் இல்லை: