செவ்வாய், 16 ஜனவரி, 2024

தினமொரு கவிதை

 எதுவரை என்னுடன் வருவாய் வினவினேன்

என்றுமே உன்னுடன் உன்னுள்ளே உயிராய்
உரைத்து நகைத்து கண் சிமிட்டி
உண்மை பொய் அல்ல என்றாள்
கட்டி அணைக்க கைகள் துடித்தன
எட்டியே நின்று பார்த்தேன் அவளை
சுட்டிக் குழந்தை போல் நகைத்தாள்
தொட்டில் கட்டியே மனதில் ஊஞ்சல்
தொல்லை செய்தாள் சிணுங்கி சிரித்தாள்
கள்ளப் பார்வை கண்கள் சிமிட்டல்
உள்ளம் கொள்ளை கொணடவள் அவளே
இன்று நேற்று அல்ல பலநாளும்
இனியவள் தான் குறும்பு குணம்
வருவாள் தொடுவாள் ஓடி ஒளிவாள்
வயதோ என்றும் இளமை உருவே
இரவில் கருக்கலில் அந்தி வேளையில்
இவளின் அன்புத் தொல்லை தாங்காது
இன்பச் சுமையே இவளது நெருக்கம்
இதனால் பிறக்கும் தினமொரு கவிதை

கருத்துகள் இல்லை: