புதன், 17 ஜனவரி, 2024

தாத்தா இருக்கேன்

 தத்தி நடை போட்டு வா அருகே

சுத்தி போட வேணுமாம் பாட்டி சொன்னா
நெத்தி பொட்டு அழகா இருக்கு உனக்கு
கத்தி வேணா விளையாட தூர வைச்சுடு
சுத்தி வைச்சு அடிச்சா உடஞ்சு போகும்
புத்தி உள்ள புள்ள நீ பேச்சு கேட்பே
சுத்தி சுத்தி ஓடாதே கால் வலிக்கும்
வத்தி கொளுத்த தெரியுமா சுடப் போகுது
முத்தி போன மாங்கா கடிச்சு பாரு
கத்தி கூச்சல் போடாதே அப்பா வைவார்
கொத்தி வச்ச பாத்தி செடிய நடுவா
ஊத்தி வச்ச தண்ணி தெளி மேலே
பேத்தி பேரன் விளையாட தாத்தா இருக்கேன்

கருத்துகள் இல்லை: