புதன், 17 ஜனவரி, 2024

கலையாத கனவில்

 கனவுலகில் நான் மிதந்தேன் கற்பனைகள் பல்வகையாய்

கலையாமல் பவனி வந்தேன் கற்கண்டாய் நினைவுகளில்
வளமான நாட்டினிலே வறுமை இல்லா உழவர்கள்
வயல்வெளிகள் தொழிலகமாய் வணிக வளாகங்கள் ஆனதுவே
ஊரெங்கும் கானகங்கள் மாதமெல்லாம் மழைச் சாரல்
ஊற்றெடுத்த நதிநீரில் உலாவரும் படகுக் குழாம்கள்
வடக்கிருந்து தெற்கு வரை ஆற்றுப் பெருக்கு
கடலுக்குப் போகாமல் கட்டிய அணைகள் பலவுண்டு
கிராமந் தோறும் தொழிலகங்கள் உற்பத்தி பலமடங்கு
கிடையாது சாதிமதம் குலமும் தேவனும் ஒன்றே
குழுக்களாய் மக்களே ஆட்சி செய்யும் அழகு
குற்றம் அற்ற நாட்டிலே அமைதி எங்கும்
ஊழல் மறைந்தே பலகாலம் உண்மை வெற்றி
ஊரக வளர்ச்சி உலகே வியந்து பார்க்க
பசுமைப் போர்வை நீண்ட சாலைகள் எங்கும்
பகைமை அற்ற மனித உறவுகள் என்றும்
கலையாத கனவில் கண்மூடிய நேரத்துக் காட்சிகள்
கற்பனை ஆனாலும் நிஜமாகாதா என்றொரு ஏக்கம் !

கருத்துகள் இல்லை: