புதன், 17 ஜனவரி, 2024

அறிவைத் தீட்டு

 விட்டு விடு என்றால் விடவா போகிறாய்

சுட்டு விடும் தெரிந்தே விரலால் தொடுவாய்
குட்டு பட்டும் குனிந்தே பழகிய அடிமையாய்
எட்டு திசையிலும் எத்தனை சாதிகள் சொல்வாய்
பட்டும் மாறாத புத்தி உனதே மனிதா
கெட்டும் பிரியாத மடமை கொண்ட மனதே
தன்னை உயர்த்த ஒருவன் செய்த சூழ்ச்சி
உன்னை குருடாய் மாற்றி மயக்கி வைத்தது
மாய வலையை கிழித்து வெளியேறு இன்றாவது
தூய வழிகள் சிந்தி புத்தியைத் தீட்டு
அனைத்தும் உன்னை அடிமை ஆக்கவே சொன்னவை
அறிவைத் தீட்டு விலகிவா வெளிச்சம் தேடி

கருத்துகள் இல்லை: