செவ்வாய், 16 ஜனவரி, 2024

புவியைச் சுற்றுவோமா ?

 எங்கெங்கும் பரவிய பசுமை விருந்து

எத்தனை கோடி உண்டு உலகில்
பறவையாய் சிறகடித்து சுற்றிட ஆசையுண்டு
வறண்ட பாலையில் சோலை ஆனாலும்
நீண்ட ஆற்றின் வளைவு நெளிவுகளில்
கண்ட அருவிகளில் குளித்துக் களைத்து
தென்னை மாபலா பழங்களில் பசியாறி
தன்னை மறந்த நிலையில் மயங்கி
உயரப் பறந்து மலைகளில் அமர்ந்து
உரசும் மேகக் கூட்டங்கள் நண்பராக
மேலும் உயர்ந்து பனிமுகடு தொட்டு
மேல்வானில் விண்முட்டி புவியைச் சுற்றுவோமா ?

கருத்துகள் இல்லை: