செவ்வாய், 16 ஜனவரி, 2024

மழலைப் பருவம். !

 காலை உதைப்பதும் கண் சிமிட்டலும்

பாலைப் பருகி புன் முறுவலும்
தவழும் வயிறு தலை தூக்கலும்
கவிழப் பார்த்து வீழ்ந்து சிணுங்கலும்
முட்டி போட்டு முன்னேறி நடத்தலும்
எட்டிய அனைத்தும் தரையிலே சிதறலும்
தட்டிக் கேட்டால் தலைமேல் சினமும்
கொட்டிய பொருளை வாரியே களைப்பு
வாயிலே மண்ணும் கல்லும் உருசியே
பாயிலே படுக்காமல் பளிங்குத் தரையில்
கடைக்குள் அனைத்தும் அவனுக்கே சொந்தம்
நடைக்கு சிலநேரம் ஆனந்தம் உண்டு
புதியவை ஆராய விஞ்ஞானி பிரித்து
புதினம் வாழ்வில் மழலைப் பருவம். !

கருத்துகள் இல்லை: