செவ்வாய், 16 ஜனவரி, 2024

ஓய்வு

 மெல்ல விடியும் காலைப் பொழுது

நல்ல பாடல் ஒன்று தூரத்தே
கண்கள் திறவாமல் காதுகள் திறந்து
கற்பனை உலகில் வலம் வந்தபடி
அமைதி மனதில் ஆரவாரம் இல்லை
அடுக்களை நெருப்பு ஏற்ற நேரமுண்டு
ஓட்டமாய் நடக்க தேவைகள் இல்லை
ஓடும் கடிகார முள் மெதுவாய்
ஆண்டுகள் கடந்த கதைகள் கோடுகளாய்
ஆலமர விழுது தரைதொடப் பார்க்குது
நாளைப் பொழுது எப்படிப் போகும்
நால்வித நினைவுகள் நாடகம் போடும்
உடல் தளர்ந்து உள்ளம் அமைதியாய்
உறக்கம் குறைந்து கால்கள் சோர்ந்து
எண்ண அலைகள் கரையைத் தேடி
எல்லை அற்ற கற்பனை உலகில்
ஓய்வு என்பதே இப்படித் தானோ
ஓயாத மனதில் ஆயிரம் வினாக்கள்

கருத்துகள் இல்லை: