புதன், 17 ஜனவரி, 2024

இராஜ புதனப் பயணம் - பகுதி ஆறு

 இராஜ புதனப் பயணம் - பகுதி ஆறு

காலச்சக்கரம் தான் மனித வாழ்வின் பரிமாணங்களை உணர்த்துகிறது. பள்ளியில் படித்தபோது ஒருமுறை ஒன்பது ரூபாய் தந்தை தராததால் சக மாணவரோடு சுற்றுலா செல்ல முடியாமல் போனது. சுமார் நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஊர் சுற்றுவதே அலுவலக வேலை மற்றும் நண்பர்களோடு தொடராகப் போயிற்று. மலைக்க வைக்கும் பெருந்தொடராய் பல ஊர்கள்.
நாள் எட்டு
காலையில் வெறும் தேநீர் அருந்தி Rising Sun treat தங்குமிடம் ஒரு வலம் வந்து அங்கிருந்து கிளம்பி ஹல்டிகாட்டி என்ற இடத்திற்குப் பயணம். மகா இராணா பிரதாப் இம் மேவார் பகுதியில் மிகச் சிறந்த வீரம் மிக்க மன்னராக இருந்திருக்கிறார். அக்பர் படைகள் முதலில் மான்சிங் தலைமையிலும், பிறகு அக்பர் தலைமையில் ஏழு முறை படையெடுத்தும் இவரை வெல்ல முடியவில்லை. இங்கு போரில் இறந்தவர்களின் இரத்தம் கலந்து மண்ணின் நிறம் மஞ்சளாய் மாறியதால் இந்த இடத்தின் பெயர் ஹல்தி ( மஞ்சள்) காட்டி ஆனதாம். அருகிலுள்ள பனாஸ் என்ற ஆற்றங்கரையில் போர் நடை பெற்ற போது சேட்டக் என்ற குதிரை ஒரு கால் அடிபட்டும் எதிரிகளோடு போரிட உதவியதாகவும், ஒரே தாவலில் 20அடி அகலமான ஆற்றைக் கடந்து இறந்ததாகவும் சொல்லப் படுகிறது. அதன் சமாதி இன்றும் உள்ளது.
அங்கிருந்து உதய்பூர் அடைந்து, கிராமிய நடனக்குழுவின் ஒரு மணி நேர நடனம் கண்டு களித்து, படே சாகர் ஏரியில் படகு சவாரி சென்று அதன் அழகைக் கண்டு இரசித்த பின், ஓட்டலில் செக் இன் செய்து, அன்றைய நாள் முடிந்தது
நாள் ஒன்பது
காலையில் உதய்பூர் அரண்மனை விசிட், மன்னர் உதய்சிங், இராணாபிரதாப் சிங்கின் தந்தை ஆவார். அவரால் நிர்மாணிக்கப்பட்ட நகரம். அரண்மனை மிகப் பெரியதாய் இரண்ட்டுக்கு லிப்ட்டில் சென்று மேலும் படிக்கட்டுகள், குறுகலான வழிகள் இவற்றில் சென்று அதன் பிரமாண்டத்தைக் காண பிரமிப்பாய் இருந்தது. மற்ற அரண்மனைகள் போலவே பல்வேறு காட்சிப் பொருட்கள். நாம் சிற்ப வேலைப்பாடுகள், தளவாடங்களில் எவ்வளவு முன்னேறி இருந்தோம் எனத் தெரிந்தது. உதய்பூர் சற்றே மாறுபட்டு கட்டிடங்கள் சம காலத்தவையாக நகரம் இருக்கிறது.
அடுத்துச் சென்ற பூங்கா மன்னர் தனது இராணி மற்றும் தோழியருக்காக, நிர்மாணித்த மிகப் பெரிய தோட்டம். அழகான நீரூற்றுகளோடு பார்க்க கண்ணுக்கு விருந்தாக. மதிய உணவுக்குப் பிறகு சிறிது ஓய்வெடுத்து, மாலையில் பண்ணி (Banni Mata) மாதா கோயிலுக்கு மலை உச்சிக்குச் செல்ல Rope way car ல் பயணம். மேலே சென்று தரிசனம் முடித்து, விளக்கொளியில் நகரின் அழகைக் கிளிக்கி, மீண்டும் ரோப் காரில் பயணித்து கீழே இறங்கிய போது அடுத்த நாள் காலையில் ஆறரைக்குப் பயணம் தொடங்க முடிவானது.
இராஜஸ்தான் மாநிலம் தான் பழமை மாறாத கோட்டைகளை பாதுகாத்து வைத்திருப்பது போற்றத் தக்கது. இந்தியாவின் சரித்திரப் புகழை பறைசாற்றும் மாநிலம். ஒவ்வொரு இந்தியனும் வாழ்நாளில் பார்க்க வேண்டிய இடம். போர்களின் பிரமாண்டமும், மக் களின் தேச பக்தியும் அதிகமாய்க் காண முடிகிறது.
( தொடரும்)
All reactions:
Shashi Shanmugam, Younes Matheen and 2 others

கருத்துகள் இல்லை: