செவ்வாய், 16 ஜனவரி, 2024

தமிழே தாயே

 தமிழின் செறிவு கண்டு வியக்கிறேன்

தமிழே தாயே போற்றி வணங்குவேன்
கற்றது கையளவே என்பதே உண்மை
பெற்ற தாயும் நீயும் ஒன்றே
நற்றமிழ் பாடிட நல்வரம் தந்தாய்
நன்னெறி நூல்கள் ஆயிரம் உண்டு
சொற்களின் பொருளோ பல்வகை பெருகி
கற்கவே நாட்கள் போதாது வாழ்நாளில்
கண்டது கேட்டது எத்தனை எத்தனை
இலக்கிய உலகில் எண்ணற்ற நூல்கள்
இருப்பவை சிலவே எரித்தவை போக
எம்மொழி அறிவை என்றும் கொள்வோம்
எந்தையும் தாயும் என்றே ஏற்போம்
கன்றது பசுவின் பாலினைப் பருகும்
கற்றலும் அதுபோல் ஞானப் பாலே
தமிழது கற்றே மொழிதனை வளர்ப்போம்
தவறாது மனதினில் நம்மொழி சேரட்டும்

கருத்துகள் இல்லை: