புதன், 17 ஜனவரி, 2024

ஞானத்தின் பிறப்பு

 வருவதும் போவதும் வாழ்வின் வாடிக்கை

வளர்வதும் மலர்வதும் மலரின் இயல்பு
தெரிவதும் தெளிவதும் ஞானத்தின் பிறப்பு
புரிவதும் புலமையும் அறிவின் வளர்ச்சி
கற்றலும் கேட்டலும் அனுபவ முதிர்வு
பற்றும் பாசமும் உணர்வின் வெளிப்பாடு
தோல்வியும் வெற்றியும் உயர்வின் படிகள்
தோற்றமும் தொய்வும் முதிர்வதின் அடையாளம்
சுழலும் உலகம் நாளின் உருவாக்கம்
சுற்றம் நட்பு அன்பின் உருவம்
சொற்கள் கோர்வை கவிதை வரிகள்
கற்பனை உலகை வலம்வரும் ஊர்தி

கருத்துகள் இல்லை: