செவ்வாய், 16 ஜனவரி, 2024

குள்ள நரி

 ஓடுகிற தண்ணியிலே ஒரு மீனை பாத்த கொக்கு

பாடுது ஆடுது பசிக்கு இரை ஆக்க துடிக்குது
காட்டு முயல் துள்ளி இங்கும் அங்கும் ஓடுது
வேட்டை ஆட குள்ள நரி உத்துப் பாக்குது
மான்கள் கூட்டம் மருண்ட பார்வை தலையை ஆட்டுது
மாட்டுவது புலிப் பசிக்கு யாரென்று தெரியாத யோசனையில்
குரங்குக் கூட்டம் மரத்தி்ல் அமர்ந்து சத்தம் போடுது
வரப் போகும் ஆபத்தை கட்டியம் கூறி எச்சரிக்குது

கருத்துகள் இல்லை: