செவ்வாய், 16 ஜனவரி, 2024

பொறுத்திரு மனமே !

 இரவுகள் விடிவதும் இருளது மறைவதும்

இயற்கையின் விளையாட்டு
இன்பமும் துன்பமும் சுழற்சியில் விளைவது இறைவனின் விளையாட்டு
சினமுடன் சிரிப்புடன் உறவோடு உரையாடிக் களித்திரு மனமே
தினமொரு நாடகம் வாழ்வினில் மாறிடும் திரையும் வீழ்ந்திடும்
மனமொரு மந்தியாய் தாவிடும் நாளினில் நாவினில் நஞ்சூறும்
மனிதமே இதுதான் மாற்றங்கள் மாறாதது
உணர்ந்திடு மனமே
கடிதலும் அணைத்தலும் கனத்திலே மாறிடும் காதலின் வலிமையாகும்
நொடிதனில் தோன்றிடும் கோபங்கள் உடலிலே நோயது போலவாம்
பாதைகள் என்றுமே வளைந்தும் நெளிந்தும் புரிதல் எளிது
பார்வைகள் நேராய் அமைய ஆறுதல் கொள்வாய் மனமே
வாழ்க்கை என்பதே வட்டம் போன்றது போனதே வந்திடும்
வாசல்கள் தோறும் வாடிக்கை என்பது வாழ்வின் நியதி
இன்று போகும் நாளை பிறக்கும் காலங்கள் மாறும்
இறைவனின் நாடகம் முடியும் நாள்வரை பொறுத்திரு மனமே !

கருத்துகள் இல்லை: