புதன், 17 ஜனவரி, 2024

வருமுன் காப்பது

 ஆறு குளம் நிரம்பிடுச்சு அண்ணே

வேறு வழி போகாத மழைநீர்
கூறு போட்டு விற்ற நிலம்
சேறு சகதி முதலை பாம்பு
மிருகம் வாழும் நாடாப் போச்சு
மிதக்க படகு தெரு ஓரம்
வருது வெள்ளம் ஆண்டு தோறும்
பெரிதா ஏதாவது செய்யணும் அண்ணே
மனம் இருந்தா மார்க்கம் உண்டு
சினம் இல்லா சிந்தனை வேணும்
வடிகால் கட்டி வெகுதூரம் சேர்த்து
வயலுக்கும் வாழ்வுக்கும் சேர்த்து வைப்போம்
வருமுன் காப்பது நலமே என்றும்
பொருமும் மனமே இன்றே யோசி
சிறுநாடு ( சிங்கப்பூர்) செய்வதை செய்ய இயலாதோ
சிறிதே முயன்றால் சிறப்பாய் முடியும்

கருத்துகள் இல்லை: