செவ்வாய், 16 ஜனவரி, 2024

பித்தப்பை அகற்றல் (Gallbladder removal)

 பித்தப்பை அகற்றல் (Gallbladder removal)

காட்சி 1
வியாழன் மாலை குளிர் நடுக்கம், மூத்த மகன், மூலம் ஆம்புலன்ஸில் நினைவற்று வெள்ளி காலை வரை. நடந்தவை அறியேன்.
கண் திறந்தபோது பெரிய அரங்கொன்றில் திரைச்சீலைகளுடன் பல அறைகள். நான் அவற்றில் ஒன்றில். கழுத்திலே பல வித வண்ண ஸாக்கெட்களுடன். தலைக்குப் பின்புறம் உடல் பாகங்களின் துடிப்பு அளவீடு மானிட்டர்கள். அரங்கு முழுதும் சத்தமுடன்.
நர்ஸ் தேவதைகள், தேவர்கள் இங்கும் அங்கும் ஓடிய படி, பணிவிடை செய்தபடி. என்னை இப்போது ஆறு மாதக் குழந்தையாக எண்ணிக் கொள்ளுங்கள். அன்று பல் வேறு ஸ்கேன் மற்றும் அறுவைச் சிகிச்சை உள்ளதால் தண்ணீர் அருந்த அனுமதி இல்லை. மூக்கினில் ஆக்ஸிஜன் மாஸ்க், பிரத்யேக ஆடை.
CT Scan முதலில், MRI Scan அடுத்து மிகச் சிறிய நுழைவில் அசையாமல். பிற்பகல் ஆப்பரேஷன் என முடிவானது எல்லா ரிப்போர்ட் ஸ்டடி செய்யப்பட்டு.
மருத்துவர்கள் வந்த வண்ணமும் போன வண்ணமும். மூளையின் வேலைப்பாடு தெளிவற்று.
( தொடரும்)

கருத்துகள் இல்லை: