செவ்வாய், 16 ஜனவரி, 2024

பித்தப்பை அகற்றல் (Gall bladder removal)

 பித்தப்பை அகற்றல்

(Gall bladder removal)

காட்சி 4
அனைத்து சோதனை பாராமீட்டர்களும் நன்றாகவே செட்டில் ஆனதாலும், ECG normal என்று தெரிந்தும், மகன்கள் அழுத்தம் கொடுத்து ward (twin sharing)க்கு மாற்ற ஏற்பாடு ஆரம்பம். வார்ட் கிடைப்பது நேரமானதால், இடைநிலை வார்ட் ஒன்றுக்கு புதனன்று பிற்பகல் மாற்றப்பட்டு, ஒரு பெரிய அரங்கில் நானும் மற்றொருவரும், எங்களை பார்த்துக் கொள்ள ஸிஸ்டர் ஒருவரும்.
இப்போது கண்ணாடி ஜன்னல் வழியாக, எதிரேயுள்ள IIMB எல்லைச் சுவர் மரங்கள், மெட்ரோ பிரிட்ஜ் கண்களில் பட்டன.
ஒரு வாரமாக பேசாமல் இருந்த நான், என் எதிரில் இருந்த 40 வயது நண்பரிடம், என் வாழ்க்கை சரித்திரம் ஒப்படைத்து விட்டேன், அவர் HCL IT, Liver related operationக்கு வந்திருந்தார்.
ஒரு வழியாக அறை எண் 782, நள்ளிரவில் கிடைத்தது. பக்கத்து படுக்கையில் மூக்கில் இரத்தக் கசிவுக்கான அறுவை சிகிச்சைக்கு. இன்சூரன்ஸ் அப்ரூவலுக்கு மூன்று நாட்களாய் போராடிக் கொண்டிருந்தார்.
அறையில் டாய்லெட், TV, screen தடுப்பு இருந்தன. உடலில் இணைக்கப் பட்டிருந்த பைப்கள் ஒவ்வொன்றாக விலக்கப் பட்டன. எழுந்து நடமாட மகன் உதவியோட ஆரம்பித்து, சுய வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். எடை 94.6 kg to 88.7 மூன்று நாட்களில். உணவு மெதுவாக நார்மல் டயட் கொடுக்கப் பட்டது, சுவையோடு.
மாலை 4 - 7 மணி பார்வையாளர் அனுமதி, உறவினர்களோடு அளவளாவல், ஆஷஸ் சீரீஸ் கிரிக்கெட், நேரம் ஓடிற்று. CEG 79 தோழர் HAL பாலசுந்தரம் விசிட்டில் அவரது பழைய அனுபவங்களை பகிர்ந்தார். மைத்துனர் சாமியாரகவே மாறிய சத்தியும் பல கதைகள் கூற நேரம் போனதே தெரியவில்லை. நாங்களாக முன் வந்து ஒரு நாள் அதிகமாகத் தங்கி, வெள்ளியன்று சில மணி நேரங்கள் காத்திருப்புக்குப் பிறகு, இன்சூரன்ஸ் அப்ரூவல் எங்கள் கணக்கீட்டின்படியே கிடைக்க, மீதமுள்ள பணம் இரு மகன்களாலும் கட்டப்பட்டு, இரவு 10 45க்கு, எனது காரில், இளைய மகன் டிரைவ் செய்ய, வீடு வந்து, முதல் மாடி படியேறி அறையை அடைந்தபோது புது உலகம் போலத் தோன்றியது.
எனது படுக்கை, மூத்த மகன் வீட்டு டயட் உணவு, உறவினர், நண்பர் வருகை, எட்டு நாட்களுக்குப் பிறகு குளியல்.
அறுவை சிகிச்சை் நிபுணர், நெப்ராலஜி் நிபுணர் சந்திப்பு ஆயிற்று, நாளை Cardiologist visit. Blood test Creatinine அளவு மற்ற அளவுகள் நார்மல்.
கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் நானே செய்யப் பழகி விட்டேன்.

bandaidsum எடுக்கப் பட்டு ointment போட ஆரம்பித்தாயிற்று. நான்கு ஒரு செமி அளவிலான துளைகள் காய்ந்த வடு வயிற்றின் மேற்புறம் மூன்றும், தொப்புள் அருகில் ஒன்றும்.
நல்லுள்ளம் படைத்த அனைத்து உறவினர், நண்பர், என்னுடன் பணியாற்றிய நண்பர், முக நூல் நணபர், Robins என அனைவரது பிரார்த்தனைக்கும் மனமார்ந்த நன்றிகள்.
God is one and he is great.
( முற்றும்)

கருத்துகள் இல்லை: