செவ்வாய், 16 ஜனவரி, 2024

பித்தப்பை அகற்றல் (Gall bladder removal)

 பித்தப்பை அகற்றல்

(Gall bladder removal)
காட்சி 3
மூக்கு வழியாக வயிறு வரை செலுத்தப்பட்ட ஒரு பைப்பும், ஆக்ஸிஜன் மாஸ்க் or Insert இருந்த அந்த ஒரு நாள் கடினமாக ஓடியது. மானிடர் சத்தங்கள் கூட்டுக் குடும்பமாய்.
கழுத்தில் சுமார் எட்டு சாக்கெட் பலவித injections, blood எடுக்க என Centre line எனப்படும் அது மருத்துவமனையில் இருந்தவரை.
தினசரி இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடற்பயிற்சி படுத்தவாறே, கழிவகற்றல், உடல் சுத்திகரித்தல், பெட் லினன் மாற்றம் என ஒரு தொழிற்சாலை போல் நேரம் தவறாமல் நடந்தேறின.
சினிமா காட்சிகள் போல மாற்றங்கள், ஷிப்ட் சேஞ் . ஸிஸ்டர்ஸ் மாதத்தில் இரு வாரங்கள் இரவு ஷிப்ட் கட்டாயம் (12 hours இது மட்டும்). செல்லச் சீண்டல்கள் அவ்வப்போது சக ஸிஸ்டர்ஸ் உடன்,விடிவதற்கு சில மணி நேரம் இருக்கும் போது குட்டித் தூக்கம் போடுகிறார்கள். படுக்கை அருகே எமர்ஜன்சி கால் பட்டன் அழுத்தியவுடன் வந்து விடுவர். அனுபவ மூத்த ஸிஸ்டர்ஸ் முகம் கடுகடுவென ஏனோ தெரியவில்லை.
மல்லிகார்ஜூன், கனிமொழி, சிபினா போன்ற நர்ஸிங் அலுவலரும், இராஜூ, சாந்தனு போன்ற சர்ஜன்ஸ்உம் மனதில் சற்று உயர்மதிப்பு பெற்றனர்.
ICUல் இருந்த போது உறவினர் அல்லாது சென்னையிலிருந்து அந்தோணி, அசோக், சுப்பையா வந்து பார்த்தனர். ஒரு நாளில் இரண்டு பேர் மட்டுமே பார்க்க அனுமதி.
தங்கையின் கட்டளை இனி பயணங்களை தவிர்க்க வேண்டுமென.
( தொடரும்)

கருத்துகள் இல்லை: