செவ்வாய், 16 ஜனவரி, 2024

மொழி காத்திட

 வேற்று மொழிகள் என் சகோதரிகள்

கற்ற மொழி தமிழ் ஆதலால் தாயானாள்
தமக்கை தங்கை புலம் பெயரலாம்
தனயன் தம்பியும் இடம் மாறலாம்
இருப்பது எங்கு ஆயினும் மறவேன்
இனம் தமிழினம் அதனால் என்றும்
கடலோடி களம் கண்ட மரபினர்
படகோட்டி பயணித்த மறவர் கூட்டம்
வென்ற போதும் அவர்வசமே நாடுகள்
சென்ற இடமெல்லாம் சிறந்த பெயரோடு
கோயில்கள் உலகெங்கும் உயரக் கட்டி
கோலோச்சிய மன்னர் முன்னோர் ஆவர்
வீரம் விளைந்த மண்ணும் உடலும்
வீம்புப் பேச்சு இல்லா செயல்வீரர்
மொழி காத்திட தொன்மை காத்திட
மொத்த இளையரும் உறுதி கொள்க !

கருத்துகள் இல்லை: