செவ்வாய், 16 ஜனவரி, 2024

கேள்விகள்

 ஓய்வென்பது யாது சொல்வீரா

ஓடியாடி உழைத்து ஓய்தலா
உடல் சோர்ந்து போவதா
உள்ளம் தளர்ந்து போவதா
தலைவரென்ற பதவி மாறுவதா
தலைவலி குறைந்த நாட்களா
சொந்தங்கள் விலகிப் போவதா
வந்தவர் வானோக்கி விரைவதா
கால்கள் தளர்ந்த நடையா
கண்கள் குறுகிய பார்வையா
நேரங்கள் நெடிதான தோற்றமா
நேரான முதுகு வளைவதா
இரண்டு கால்கள் மூன்றாவதா
இரவுகள் குறுகிப் போவதா
சிந்தனை சுழன்ற கேள்விகள்
வருவதும் போவதும் வாடிக்கை

கருத்துகள் இல்லை: