சனி, 18 ஏப்ரல், 2020

விடியும் நேரம்

மெல்லிய காற்று உடல் தழுவ மேனி சிலிர்த்தது
மெல்லியலாள் விரல் தடவ உடல் அதிர்வு கண்டது
சில்லென்ற காற்று இளங்காலைப் போதில் இனிமை சேர்த்தது
சிட்டுக் குருவியின் கீச்சுக் குரல் இதமாய்க் கேட்டது
பறவைக் கூட்டம் கூடு துறந்து பறந்து சென்றது
கறவை மாடு கன்றை அழைக்க அம்மா என்றது
தூரத்து ஆலையிலே சங்கு ஒலித்து நேரம் சொல்லியது
தூங்காத பாப்பாவின் அழுகைச் சத்தம் அலறலாய் மாறியது
கோயிலின் மணியோசை கோபுர உச்சியிலே ஒலித்து முடித்தது
கோலம் போட்ட வாலைக்குமரி புள்ளிகளைக் கோடுகளால் இணைத்தாள்
விடியும் நேரம் காட்சிபல கண்டது கண்ணின் ஓரம்
விந்தை உலகமடா விழித்திடு நீயும் என்றது ஒருகுரல் !

கருத்துகள் இல்லை: