சனி, 18 ஏப்ரல், 2020

பிஸினஸ் பாகம் 4

பிஸினஸ் பாகம் 4
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. இருக்கும் நாட்களில் நல்வாழ்வை துணை கொள்வோம்.
பிஸனஸ்லே தொடர்ந்து பல தேடல்கள்.துணிக்கடையை முயற்சிக்கலாம்னு தோணினப்ப 2013லே என்னோட i20 கார் வாங்கி சில மாதங்களே ஆகியிருந்தன.
பிளான் ரெடி இப்ப. ஹோட்டல் பிஸினஸ் பண்ணலாம்னு நினைச்சப்ப நிறைய ஆராய்ச்சி பண்ணி விட்டது, குக்கீஸ் பண்ண கொட்டேஷன் வாங்கி லாபகரம் இல்லேனு விட்டது போல இதை நிறைய யோசிக்கலே.
கார்லே சூரத் போகலாம்னு நண்பரோடு கிளம்பி முதல் ஸ்டாப் கோலாப்பூர். புதுக்கார் டிரைவிங் நல்லாதான் இருந்தது. 150கிமீ ஸ்பீட் டச் பண்ணி பாத்தாச்சு. நமக்கு தான் லாங் டிரைவ் பிடிச்ச விசயமாச்சே. மகாலஷ்மி கோயில் தரிசனம்.
இரண்டாம் ஸ்டாப் மும்பாய். அங்கே மொத்த வியாபார காந்தி மார்க்கெட் துணிகளுக்கு, பிறகு நாவல்டி பொருட்கள் மார்க்கெட் மொத்த வியாபாரக் கடைகள் எல்லாம் சுத்தி ஸேம்பிள்ஸ் வாங்கிக் கிட்டு மூணாவது ஸ்டாப்பான சூரத்துக்குப் பயணம். கூட இருந்த நண்பருக்கு இந்தி தெரிஞ்சதாலே பேசறது பிர்ச்னை இல்லே.
தங்கியிருந்த ஹோட்டல்லே விசாரிச்சு நல்ல கடைகள் கேட்டு கடைக்குப் போயாச்சு. மலை மலையா புடவை,சுட்டிதார் துணிகள் பல வகை விலைக்கு ஏத்த மாதிரி. புடவைகளும் சுட்டிதார் மெட்டீரியலும் ஆரடர் பண்ணிட்டு பணமும் கட்டிட்டு அனுப்பச் சொல்லிட்டு பூனா வழியாக முதல் ஸ்டாப் மகாபலேஷ்வர். அங்கிருந்த கடை வீதிலே பல ரகப் பொருட்களோட ஸ்டாரபெரி போன்ற பழ வகைகள்.
மறுநாள் கிளம்பி பெல்காம்லே தங்கி பெங்களூர் வந்தாச்சு. துணிகளை விக்க சேல்ஸ்வுமன் அப்பாயிண்ட்டட். இதுவும் கடந்து போனது. வியாபாரம் நமக்கு சரிப்படாது என்று. தோன்ற ஆரம்பித்தது. சுடிதார் மெட்டீரியல் வந்தப்ப லெக்கிங்ஸ் டாப்புக்கு பெண்கள் மாறியதால் விற்பனையாகலே. சாரீஸ் நாங்க செலக்ட் பண்ணது ஒண்ணு அவங்க அனுப்பனது வேறே. அதுவும் சரியா விக்கலே. மெது மெதுவா சொந்தக்காரங்களுக்கு கொஞ்சம் தெரிஞ்சவங்களுக்கு மிகக்குறைஞ்ச விலைனு கொடுத்து இருந்தத தள்ள வேண்டியதாச்சு. சென்னைலே ஹவுஸ் ஓனர ்பெருமளவு படவைங்களே வாங்கி யுஎஸ் கொண்டு போனாங்க.
கடைலே வேல செஞ்ச பெண்மணி என் மேல இரக்கப்பட்டு சார் சும்மா உக்காந்துட்டு சம்மளம் வாங்கறது மனசு கேக்கலேனு அவங்களே வேலைய விட்டு நின்னுட்டாங்க.
போனமாதம் 2019 டிசம்பர் வர அந்த ஸ்டாக் இருந்துச்சு. நிறைய தர்மமும் பண்ணியாச்சு துணிங்கள.
2017லே சென்னைக்கே வந்து அருண் எக்சல்லோல கன்சல்டண்ட்டா சேந்தது உங்களுக்கெல்லாம் தெரிஞ்க விஷயம்.
லக் வியாபாரத்துலே வேணும்றது மீண்டும் புரிஞ்சது.
(முற்றும்)

கருத்துகள் இல்லை: