சனி, 18 ஏப்ரல், 2020

பாரதியென்ற சாரதி

முண்டாசு முறுக்கு மீசை சிவந்த விழிகள்
முக்காலம் உணர்ந்த கவிதைகள் முறுக்கேற்றும் வார்த்தைகள்
கண்ணனை பராசக்தியை பாப்பாவை பலவிதமாய் வாழ்த்தியவன்
ஒற்றுமை ஓங்கிட உன்மத்தம் நீங்கிட பாடல்கள்
அச்சம் தவிர்த்திடவும் ரௌத்திரம் பழகிடவும் பலவரிகள்
நாட்டினர் வளம்பெற நதிகளின் இணைப்பும் கவிதையில்
வார்த்தைகள் கணலாய் படித்தவர் வீறுகொள்ளும் சொல்வீச்சு
இறையருள் நாட்டுப்பற்று நல்வாழ்க்கை கொண்டாட்டம் அனைத்தும்
பாடாத பொருளில்லை. பாரதியென்ற சாரதியானான் கவிஞர்க்கு
அவனில்லாமல் நாமெல்லாம் தமிழ் வளர்க்க இயலுமா
என்றும் எம்மனதில் நிறைந்திருப்பான் தமிழன்னையின் தலைமகன்

கருத்துகள் இல்லை: