ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தாமரைத்தோட்டம், பழைய காவலர் குடியிருப்பு

1962ல் குவார்ட்டர்ஸ் மீர்சாகிப்பேட்டை வாடகை வீட்டிலிருந்து இங்க வந்தப்ப ஆறு வயசு. பள்ளிக்கூடம் சேருறப்ப காலாண்டு பரீட்சை முடிஞ்சிருந்தது.
TELC பள்ளிலே ஒண்ணாங் கிளாஸ்.ஆண் பெண் இரு பாலர் படிப்பு. ஐந்தாம் வகுப்பு வரை. ஆசிரியைகளுக்கு செல்லப்பிள்ளை, முதல் ராங்க், நாடக நாட்கள்.
பொதுக் குழாய்லே எப்பவும் தண்ணி வரும். குளியல் துணி துவைக்கிறதும் அங்கே.குவார்ட்டர்ஸ் சுத்தி நியூடோன் ஸ்டூடியோ, சிட்டாடல் ஸ்டூடியோ, டைரக்டர் திருலோகசந்தர் வீடு, தேவி தியேட்டர்ஸ் ஓனர் வீடுன்னு ஒரே சினிமா சம்பந்த விஷயங்க.
சினிமா சூட்டிங் நிறைய நடக்கும். ஐந்து லட்சம்னு ஒரு படம் ஜெமினி கணேசன் நடிச்சது. குட்டி பத்மினி க்யூட்டா இருப்பா, அவ நடிக்கறத வேடிக்கை பாப்போம். சோ குவார்ட்டர்ஸ் வழியா நடந்து போறப்ப அவரோட கண்ண வச்சு கிண்டல் பண்ணுவாங்க.
பழசு 36 வீடுங்க, வரிசைக்கு ஆறு. நாங்க இருந்தது எதிரெதிரே 12 வீடுங்க. மழை வந்தா தண்ணி குளம் மாதிரி தேங்கும். அப்ப நீச்சல் பயிற்சி தான்.
(வளரும்)

கருத்துகள் இல்லை: